/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.20 லட்சத்தில் குடிநீர் தொட்டி திறப்பு
/
ரூ.20 லட்சத்தில் குடிநீர் தொட்டி திறப்பு
ADDED : ஜூன் 08, 2025 01:16 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் மல்லாபுரம், பண்டாரசெட்டிப்பட்டி, வினோபாஜி தெரு உள்ளிட்ட, 15 வார்டுகள் உள்ளன. இதில், 4வது வார்டு புத்தர் நகரில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இம்மக்கள் குடிநீரின்றி கடும் சிரமம் அடைந்ததால் குடிநீர் வழங்க கேட்டு, தொடர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, 2024--25ம் நிதியாண்டில், 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அதிலிருந்து பொது மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை, பேரூராட்சி தலைவர் சாந்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் முத்து, துணைத்
தலைவர் ஸ்ரீதா, வார்டு உறுப்பினர் சின்னவேடி, தி.மு.க., முன்னாள் பேரூர் செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.