ADDED : ஜூன் 10, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி செங்கல் மாணிக்கம் நகர் பகுதியில், 3.80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக, மினி குடிநீர் தொட்டி அமைக்க பட்டது. நேற்று அதில் குடிநீர் ஏற்றப்பட்டு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி
குடிநீர் வழங்கி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின் குக்கல்மலை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்து தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க.,வினர் பலர் கலந்து கொண்டனர்.