/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீயணைப்புத்துறை பங்களிப்புடன் நவீன குப்பை தொட்டி திறப்பு
/
தீயணைப்புத்துறை பங்களிப்புடன் நவீன குப்பை தொட்டி திறப்பு
தீயணைப்புத்துறை பங்களிப்புடன் நவீன குப்பை தொட்டி திறப்பு
தீயணைப்புத்துறை பங்களிப்புடன் நவீன குப்பை தொட்டி திறப்பு
ADDED : அக் 28, 2024 04:10 AM
தர்மபுரி: சாலையில் கொட்டப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்-பட்ட நிலையில், அதை முறையாக சேகரிக்க, தீயணைப்புத்-துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், நவீன குப்பை தொட்டி நேற்று திறக்கப்பட்டது.
தர்மபுரி அடுத்த, எஸ்.பி., அலுவலகம் அருகே, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட தீயணைப்பு நிலையம், அண்ணா நகர் மற்றும் கருவூல காலனி பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெஞ்சாலையில் இருந்து, அப்பகுதிக்கு செல்லும் சாலையோரம் பஞ்., நிர்வாகம் சார்பில் வைத்துள்ள குப்பை தொட்டியில் கொட்டப்படும் குப்பை வாரக்கணக்கில் அப்புறப் படுத்தாமல் இருந்ததால், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்-பட்டது. இது குறித்து, பலமுறை புகாரளித்தும் பஞ்., நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்நிலையில், குப்பையை சிதறாமல் சேகரிக்க, தர்மபுரி தீய-ணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில், ஒருங்கி-ணைப்பாளராக முனுசாமி, அப்பகுதியை சேர்ந்த பி.டி.ஓ., கிருஷ்ணன்-, வக்கீல் சவுமியா-, ஆசிரியர் சிவக்குமார்- மற்றும் அப்-பகுதியை சேர்ந்த, 65 பேரின் பங்களிப்புடன் நவீன முறையி-லான, குப்பைத்தொட்டி, 70,000 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்-டது. அதை, இலக்கியம்பட்டி பஞ்.,ல் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை கொண்டு நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து, இலக்கியம்பட்டி பஞ்.,ல் பணிபுரியும் துாய்மை பணியாளர்க-ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

