பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைக்கு உத்தரவு
பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைக்கு உத்தரவு
ADDED : ஜூலை 06, 2026 01:42 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்டது கோட்-டப்பட்டி போலீஸ் ஸ்டேஷன். தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த காலங்களில், சேலம், திரு-வண்ணாமலை, விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து கள்ளச்-சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. போலீசாரின் தொடர் நடவடிக்-கையால் கள்ளச்சாராயம் விற்பனை
கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தர்மபுரி எஸ்.பி., அருண் கபிலன் வந்தார். அவர், சட்டம் -ஒழுங்கு, நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் காவல் நிலைய பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்-கொண்டார்.
இந்த ஆய்வின்போது, குற்றச் சம்பவங்களை தடுப்பது, சந்துக்க-டைகளில் மது விற்பனையை கட்டுப்படுத்துவது, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை விசாரித்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். பின், அங்கிருந்து மதியம், 1:00 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.
