/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய குடற்புழு நீக்க நாள் மாத்திரை வழங்க ஏற்பாடு
/
தேசிய குடற்புழு நீக்க நாள் மாத்திரை வழங்க ஏற்பாடு
ADDED : ஆக 23, 2024 04:47 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், ஒன்று முதல், 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இதேபோல், அனைத்து தொழில் நிறுவனங்-களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஆக., 23 இன்று குடற்-புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்ற முடி-யாமல் விடுபட்ட குழந்தைகளுக்கு, ஆக., 30 அன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டு இந்த மாத்திரை வழங்கப்படுகிறது.
இப்பணிகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையி-னருடன், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்-துறை, உயர் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் செய்கின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், இத்திட்டத்தின் மூலம், 4.12 லட்சம் குழந்தைகளுக்கும், 20 வயது முதல், 30 வயது வரை உள்ள, 1.22 லட்சம் பெண்களுக்கும், இந்த குடற்புழு நீக்க மாத்திரை வழங்-கப்படும். இந்த மாத்திரை உட்கொள்வதால், ரத்த சோகை தடுக்-கப்படும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுறு, சுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மேம்படுவதுடன், உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து குழந்தைகளுக்கும், குடற்-புழு நீக்க மாத்திரை வழங்க, பெற்றோர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.