/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்
/
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்
ADDED : டிச 11, 2025 06:39 AM
தர்மபுரி: திருப்பத்துார் அருகே, விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை, அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கியதையடுத்து, அவரது உடலுக்கு, -மருத்துவர்கள் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
திருப்பத்துார் மாவட்டம், திரியாலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 45. இவர், டூவீலரில் சென்று அலுமினிய பாத்திரங்கள் விற்பனை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள். கடந்த, 7-ம் தேதியன்று வியாபாரத்தை முடித்து விட்டு பைக்கில் ஹெல்மெட் அணி-யாமல் வீடு திரும்பினார். அப்போது நாட்றாம்-பள்ளி அருகே, எதிரே வந்த பைக் மோதியதில் ஜெய்சங்கர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சி-கிச்சைக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து, ஜெய்சங்கரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். இதில், 2 கண்கள், 2 சிறுநீரகம் தானமாக பெறப்-பட்டது. இதில், 2 கண்கள் தர்மபுரி அரசு மருத்து-வமனைக்கும், சிறுநீரகங்கள் ஈரோடு சுதா மருத்-துவனை மற்றும் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஜெய்சங்கர் உடலுக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து, நேற்று ஜெய்சங்கரின் உடலை, சொந்த ஊருக்கு எடுத்து சென்று நல்லடக்கம் செய்தனர்.
இது, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பெறப்-பட்ட, 31வது உடல் உறுப்பு தானம் என்பது குறிப்-பிடதக்கது.

