/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'மதத்தின் பெயரால் அரசியல் கட்சிகள் பதற்றம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது'
/
'மதத்தின் பெயரால் அரசியல் கட்சிகள் பதற்றம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது'
'மதத்தின் பெயரால் அரசியல் கட்சிகள் பதற்றம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது'
'மதத்தின் பெயரால் அரசியல் கட்சிகள் பதற்றம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது'
ADDED : டிச 11, 2025 06:38 AM
தர்மபுரி: ''தமிழகத்தில் கோவில், கடவுள், ஜாதி மற்றும் மதத்தின் பெயரால், அரசியல் கட்சிகள், அமைப்-புகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது,'' என, அ.ம.மு.க., பொதுச்செய-லாளர் தினகரன் கூறினார்.
தர்மபுரியில் நேற்று, அ.ம.மு.க., தர்மபுரி சட்ட-சபை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோ-சனை கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் கூறியதாவது: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திய-லிங்கம், த.வெ.க.,வில் இணைவதாக வெளி-யாகும் தகவல் வதந்தி. இதுபோன்ற வதந்திகள் பரவி வருவது குறித்து, என்னிடம் அவர் வருத்-தப்பட்டார். அவர் வேறு எந்த கட்சிக்கும் போக-மாட்டார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தீர்ப்பு வழங்-கிய நீதிபதியை நீக்கம் செய்ய, 'இண்டி' கூட்டணி சார்பில், தி.மு.க.,வினர் மனு அளித்துள்ளனர். லோக்சபாவில் 'இண்டி' கூட்டணிக்கு பெரும்-பாண்மை கிடையாது. ஏதோ ஒரு காரணத்திற்-காக அவர்கள் இதை செய்கிறார்கள். நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் தான், அவர்களை நீக்க, மனு அளிப்பது வழக்கம், ஆனால், தி.மு.க., இவ்வாறு மனு அளித்தது வித்தியாசமாக உள்-ளது. தமிழகத்தில் கோவில், கடவுள், ஜாதி மற்றும் மதத்தின் பெயரால், அரசியல் கட்சிகள், அமைப்புகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தை சீர்குலைக்கும் வகையில் அது அமையும். இதை அரசும், நீதிமன்றமும் சரி செய்யும் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, டிச., 17ல், பா.ம.க., நடத்தும் ஆர்ப்-பாட்டத்திற்கு, பா.ம.க., வக்கீல் பாலு என்னை தொடர்பு கொண்டு அழைத்தார். ஜாதிவாரி கணக்-கெடுப்பு நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்-துள்ளது. இதனால், மாநில செய்ய வேண்டிய-தில்லை. தி.மு.க., அமைச்சர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஈ.டி., ரெய்டு விவகா-ரத்தில், 'கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து விடும்' தான்.இவ்வாறு, அவர் கூறினார்.

