/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பனை, தென்னை பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்
/
பனை, தென்னை பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 20, 2025 01:36 AM
அரூர்:
தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரி
மேட்டில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் பனை, தென்னை பாதுகாப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கள் இறக்குவோர் மீது மதுவிலக்கு சட்டப்படி கைது நடவடிக்கையை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்க அம்மாநில அரசு மறுத்தது. ஆனால், தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு, தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. மதுவிலக்கு கொள்கையில் பீஹாரை, தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து, முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. மத்திய அரசும் இதில் பாராமுகமாக உள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்தாண்டு ஒரு தேங்காய், 200 ரூபாய்க்கு விற்பனையாகும். கள் ஒரு தடை செய்ய வேண்டிய பொருள் என, இ.பி.எஸ்., மற்றும் த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் நிரூபித்தால், அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை, தமிழ்நாடு கள் இயக்கம் எடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.