/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பந்தல் அமைப்பாளர் மின்சாரம் தாக்கி பலி
/
பந்தல் அமைப்பாளர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : ஜூலை 16, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அடுத்த கூடலுாரை சேர்ந்தவர் மகு, 47. இவர், ரேடியோ மற்றும் சாமியானா பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார்.
இவரது பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் பெருமாள் என்பவரது வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு பெருமாள் வீட்டின் அருகில் இருந்த மின்கம்பத்தில் மகு ஏறி பழுது பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.