/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நகராட்சியுடன் பஞ்., இணைப்பு அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
நகராட்சியுடன் பஞ்., இணைப்பு அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
நகராட்சியுடன் பஞ்., இணைப்பு அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
நகராட்சியுடன் பஞ்., இணைப்பு அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 26, 2024 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: இலக்கியம்பட்டி பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, பாலக்கோடு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
எம்.எல்.,ஏ., க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். இலக்கியம்பட்டி பஞ்சாயத்தை, தர்மபுரி நகராட்சியுடன் இணைக்க கூடாது.
அவ்வாறு இணைத்தால் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயரும் நிலை உள்ளது. தி.மு.க., அரசு இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். நகர செயலர் ரவி உள்பட திரளானோர்
கலந்து கொண்டனர்.