/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீபாவளிக்கு முன் ஊதியம ்வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
/
தீபாவளிக்கு முன் ஊதியம ்வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
தீபாவளிக்கு முன் ஊதியம ்வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
தீபாவளிக்கு முன் ஊதியம ்வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : அக் 27, 2024 01:22 AM
தர்மபுரி, அக். 27-
தீபாவளிக்கு முன் ஊதியம் வழங்க வேண்டுமென, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்திலுள்ள, 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு அக்., மாத ஊதியம் தீபாவளிக்கு முன், வழங்க வேண்டும். அக்., 31 தீபாவளி விடுமுறை, அதோடு நவ., 1 தீபாவளியையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சம்பளம் வழங்குவதற்கான நடைமுறையை துரிதப்படுத்த வேண்டும். இதில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, ஊதியத்திற்கான நிதியை, 38 மாவட்டங்களுக்கும் அனுப்ப வேண்டும். அதன் பிறகு, அந்தந்த மாவட்ட அலுவலகங்கள் பகுதிநேர ஆசிரியர்களின் வங்கி கணக்கிற்கு, மத்திய அரசு திட்ட நிதியில் இருந்து, 10,000 ரூபாய், மாநில அரசு நிதியில் இருந்து, 2,500 ரூபாய் என, 12,500 ரூபாய் பரிவர்த்தனை ஒரே நாளில் நடக்காது. அதனால் தான், முன்கூட்டியே ஊதியத்தை வழங்குங்கள் என, முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். தி.மு.க., எதிர்கட்சியாக இருந்த, 10 ஆண்டுகளில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்தும், சொன்னதை செய்யாமல் உள்ளனர். எனவே, தீபாவளிக்குள் சம்பளம் வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.