நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், நவ. 8-
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பையர்நாயக்கன்பட்டியில், சில நாட்களுக்கு முன், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இரு மாணவர்களுக்கு இடையே, பள்ளியில் தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று கோட்டப்பட்டி சமுதாயக்கூடத்தில், அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமையில், இருதரப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் வருவாய்த்துறையினர் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், வரும் காலங்களில் இது போன்ற சமூக மோதல் பிரச்னையை ஏற்படுத்த மாட்டோம் என, இருதரப்பினரும் உறுதி கூறினர்.

