/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பென்னாகரம் சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா
/
பென்னாகரம் சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா
ADDED : ஆக 01, 2025 01:39 AM
பென்னாகரம், பென்னாகரத்தில் புதியதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று, திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் பத்திரப்பதிவு துறை சார்பில், 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
இதையடுத்து, தர்மபுரி கலெக்டர் சதீஸ், தி.மு.க., - எம்.பி., மணி, பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில், சென்னை பத்திர பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சேலம் துணை பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி, மாவட்ட நிர்வாக பதிவாளர் வளர்மதி, பென்னாகரம் பதிவாளர் குமார், மாஜி எம்.எல்.ஏ., இன்பசேகரன், பென்னாகரம் பி.டி.ஓ..க்கள் சத்திவேல், லோகநாதன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.