/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தரமற்ற முறையில் தார்ச்சாலை மக்கள் குற்றச்சாட்டு
/
தரமற்ற முறையில் தார்ச்சாலை மக்கள் குற்றச்சாட்டு
ADDED : ஆக 01, 2025 01:38 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையிலிருந்து வெங்கடதம்பட்டி செல்லும் தார்ச்சாலை, 1,500 மீட்டர் நீளம் கொண்டது. இச்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. பொதுமக்கள் நலன் கருதி, இச்சாலை ஊத்தங்கரை முனியப்பன் கோவிலில் இருந்து, வெங்கடதாம்பட்டி வரை புதிதாக போடப்பட்டது.
இந்த தார்ச்சாலை கடந்த, 2 நாட்களுக்கு முன்பு தான், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்டது. அமைத்த, 2 நாட்களிலேயே பெயர்ந்து வருகிறது. தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.