/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
/
ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : நவ 17, 2025 03:57 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தர்மபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்-ளியில் நேற்று நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் லட்சுமி-காந்தன் தலைமை வகித்தார். மாவட்ட கவுரவ ஆலோசகர்கள் பழ-னிசாமி, பொன்முடி, சீனிவாசன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி வர-வேற்று, மாவட்ட சங்க செயல்பாடுகள் பற்றி பேசினார்.
இதில், நவ., 21 அன்று சென்னையில் நடக்கும் மாநில அளவி-லான மாபெரும் கோரிக்கை பேரணி மற்றும் விளக்க கூட்டத்தில், திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றார். கூட்-டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தலைவர் நாராயணன், செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் பேசினர். பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

