ADDED : நவ 17, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், சமீ-பத்தில் கனமழை பெய்த நிலையில், அதிகாலையில் குளிரும், பகல் நேரங்களில் வெயிலும் அடிக்கிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:30 முதல், 8:30 மணி வரை, அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், சாலையில், பஸ், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. நடைப்பயிற்சி மேற்கொள்ப-வர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் அவதியடைந்தனர்.

