/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு ஜி.ஹெச்.,ல் இதய பரிசோதனை மையம்
/
பாலக்கோடு ஜி.ஹெச்.,ல் இதய பரிசோதனை மையம்
ADDED : நவ 17, 2025 03:58 AM
பாலக்கோடு,: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு தினமும், பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 900க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 100க்கும் மேற்-பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, டயாலிஸ் போன்ற வசதிகள் உள்ள நிலையில், இருதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளின் இரு-தயம் மற்றும் உடல்நிலை குறித்து அறிய, கூடுதலாக எக்கோ கார்-டியோ கிராம் எனப்படும் எக்கோ சிஸ்டம் தொழில்நுட்பம் செயல்படுத்தி, பரிசோதனை செய்யும் வகையில், இதய பரிசோ-தனை மையம் அமைக்க, நீண்ட நாட்களாக முயற்சிகள் மேற்-கொள்ளப்பட்டது. மாவட்ட கலெக்டரின் முயற்சியால் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய எக்கோ கார்டியோ கிராம் இயந்திரம் வாங்கப்பட்டது. இதையடுத்து, இதய பரிசோதனை மையத்தை, மாவட்ட கலெக்டர்
சதீஸ் தலைமை வகித்து திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்ட சுகாதாரம் மற்றும் ஊரக நலப்
பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர்கள் பாலாஜி, செந்தில்குமார், சசிரேகா, யாஷிகா, நவீன் மருந்தாளுனர்கள் முத்துசாமி, முருகேசன், நர்சுகள் மற்றும் ஆஸ்-பத்திரி பணியாளர்கள் கலந்து கொண்டனர்

