/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் ஓய்வூதியர்கள் மனித சங்கிலி போராட்டம்
/
தர்மபுரியில் ஓய்வூதியர்கள் மனித சங்கிலி போராட்டம்
ADDED : ஜூலை 26, 2025 12:54 AM
தர்மபுரி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தர்மபுரி அரசு மருத்துவமனை அருகில், நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மத்திய அரசு, ஓய்வூதியர்களின் ஓய்வூதிய பலன்களை பறிக்கும் வகையில், லோக்சபாவில், 2025 மார்ச்-, 25 அன்று சட்டம் நிறைவேற்றியதை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் வலியுறுத்தினர்.