/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் கண் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
/
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் கண் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் கண் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் கண் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
ADDED : மார் 13, 2024 07:40 AM
அரூர் : உலக குளுக்கோமா பாதிப்பு குறித்து, ஆண்டுதோறும் மார்ச் 10 முதல், 16 வரை, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, அரூர் அரசு மருத்துவமனையில் குளுக்கோமா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார்.
இதில், கண் மருத்துவர் வெண்ணிலாதேவி பேசியதாவது:
குளுக்கோமா சத்தமில்லாமல் பார்வை பறிக்கும். பெரும்பாலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குடும்பத்தில் எவருக்காவது கண் அழுத்தம் இருந்தால், இந்நோய் ஏற்படுகிறது. இக்குறைப்பாடு இருந்தால் மையப்பகுதில் ஒளி வட்டம், வண்ண வளையங்கள், தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி ஏற்படும். அடிக்கடி தலைவலி, கண்வலி உண்டாகும். 40 வயது மேற்பட்டவர்கள் அவசியம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் அழுத்தம் இருந்தால், முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டால், குளுக்கோமா மூலம் பார்வை இழப்பு தடுக்கலாம். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கண் மருத்துவர் கலாகிருபாவதி, கண் மருத்துவ உதவியாளர் கலையரசன், செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி மற்றும் செவிலியர்கள் தவமணி, வாசுகி, ஆஜுரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

