ADDED : மே 02, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:
அரூர் நகரம் வழியாக தினமும், திருவண்ணாமலை, திருப்பத்துார், தர்மபுரி, சென்னை, ஓசூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, 150க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன.
இவற்றில், தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள் உபயோகம் அதிகளவில் உள்ளது. அரூர் நகர பகுதிக்குள் அதிவேகத்துடன் வரும், அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள் ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதால், ஏற்படும் அதிகப்படியான ஒலியால், முதியோர், நோயாளிகள் உட்பட பலர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், டூவீலரில் செல்வோர் அதிர்ச்சியடைந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மோட்டார் வாகன அதிகாரிகள், ஏர் ஹாரன்கள் பயன்படுத்தும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.