/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கால்நடைகளுடன் மக்கள் சாலை மறியல்

ADDED : டிச 20, 2024 01:09 AM
வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிகால்நடைகளுடன் மக்கள் சாலை மறியல்
அரூர், டிச. 20-
அரூர், அம்பேத்கர் நகர் புது காலனி அருகே, நர்சனேரி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அம்பேத்கர் நகர் மக்கள், தாங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். பல ஆண்டுகளாக ஏரிக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்லும் வழிப்பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்துள்ளார். வழிப்பாதை மற்றும் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை, 8:30 மணிக்கு, அரூர் - திருவண்ணாமலை சாலையில், மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர், தாசில்தார் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.