/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் கேட்டு பி.டி.ஓ., அலுவலகத்தை காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை
/
குடிநீர் கேட்டு பி.டி.ஓ., அலுவலகத்தை காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு பி.டி.ஓ., அலுவலகத்தை காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு பி.டி.ஓ., அலுவலகத்தை காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை
ADDED : ஜூலை 29, 2025 01:45 AM
பாப்பிரெட்டிப்பட்டி, முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, கடத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தை, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியம் ஓசஹள்ளி ஊராட்சியில், அண்ணா நகர், பாசாரப்பட்டி, போசிநாய்க்கனஹள்ளி உள்ளிட்ட, 10 கிராமங்கள் உள்ளன. இதில் புதுப்பட்டியில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இம் மக்கள் குடிநீர் இன்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு, கடத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, அம்மக்கள் கூறியதாவது: புதுப்பட்டி காலனியில், ஓராண்டுக்கு முன் மக்களுக்கு குடிநீர் வழங்க மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால்  சீராக குடிநீர் வழங்குவதில்லை. ஒகேனக்கல் குடிநீர் என்பது  கேள்விக்குறியாக உள்ளது. 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், குடிநீர் இல்லாமல் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், அரசு பணிக்கு செல்பவர்கள்  குடிநீர் இன்றி தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கி, பயன்படுத்தி வருகின்றனர். முறையான குடிநீர் வழங்க வேண்டி, பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

