/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மயான வசதி கேட்டு மக்கள் கோரிக்கை
/
மயான வசதி கேட்டு மக்கள் கோரிக்கை
ADDED : அக் 15, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இறந்தவர்களின் உடல்களை, கடத்துார் சாலையோரத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே அடக்கம் செய்த இடத்தில், மீண்டும் சடலங்களை அடக்கம் செய்யும் நிலையுள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது.
அதில், மயானத்திற்கு இடம் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.