/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சனத்குமார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
/
சனத்குமார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
சனத்குமார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
சனத்குமார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 19, 2025 03:32 AM
தர்மபுரி, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட, 4, 5வது வார்டில், குப்புசாமி ரோடு, பாவடைகார தெரு, சதாசிவ தெரு, குள்ளப்பன் தெரு, ராஜா தெரு, மாரியம்மன் கோவில் தெரு, ஜாகிதார் ரோடு, மன்னார் தெரு ஆகிய பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்குள்ள மக்கள் இறந்தால் அடக்கம் செய்வதற்கு, நகராட்சியை ஒட்டிய செட்டிக்கரை பஞ்.,ல் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுடு
காட்டில், இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்து வருகின்றனர். இந்த வழியிலுள்ள சனத்குமார் ஆற்றில், 2 ஆண்டுக்கு ஒருமுறை அதிகளவில் தண்ணீர் செல்வதால், சடலத்தை எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, சுடுகாட்டிற்கு செல்லும் வழியில், சனத்குமார் ஆற்றின் குறுக்கே, பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.