/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேதமடைந்த பாலங்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
சேதமடைந்த பாலங்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : டிச 05, 2024 07:13 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பெஞ்சல் புயல் காரணமாக
இடைவிடாது கன-மழை கொட்டித் தீர்த்தது. இதனால், அரூர் அடுத்த வேப்பம்-பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பூதிநத்தம்
கிராமத்தில் உள்ள தரைப்-பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அதே போல், எருமியாம்-பட்டியில் வெள்ள நீரால்
தரைப்பாலம் சேதமடைந்தது. வாச்-சாத்தி, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏரிகள் உடைந்தன.
வாச்சாத்தியில் இருந்து கலசப்பாடிக்கு செல்லும் வழியில் உள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டதால், மண் சாலை சேதமடைந்தது. அரூர் ரவுண்டானாவில் இருந்து, நடேசா பெட்ரோல் பங்க் வரையுள்ள,
2 கி.மீ., துாரம் சேலம் செல்லும் பைபாஸ் சாலை சேதமடைந்துள்ளது. இது போல், பல்வேறு இடங்களில்
பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்-துள்ளன. எனவே, சேதமடைந்துள்ள ஏரிகள், சாலைகள் மற்றும்
பாலங்களை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.