/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை
ADDED : நவ 03, 2025 03:09 AM
அரூர்: சித்தேரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன. இவற்றில், 12,000க்கும்  மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பல கிராமங்களில் குடிநீர், சாலை, மின்-சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையுள்ளது. மலை கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற, பல கி.மீ., துாரம் நடந்து, சித்தேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர வேண்டும். 1981ல் கட்-டப்பட்ட இந்த சுகாதார நிலையத்தில், ஒரு  டாக்டர் மற்றும், 3 செவிலியர்கள் பணிபுரிகின்றனர். கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்-ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் தினமும், சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு, பகலில் மட்டுமே டாக்டர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் டாக்டர்கள் யாரும் இருப்பதில்லை. இதனால், விஷக்கடி மற்றும் உடல்நிலை பாதித்து வரும் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் அவ-திக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே, இம்மலை கிராமங்களிலுள்ள மக்கள் நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதால், குழந்தைகள், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, சித்தேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவில் டாக்டர்கள் தங்கி பணிபு-ரியும் வகையில், தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதுடன், சேதம-டைந்துள்ள டாக்டர் மற்றும் செவிலியர் குடியிருப்புகளை சீர-மைக்க, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

