/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தபொ.மல்லாபுரம் மக்கள் அரசுக்கு கோரிக்கை
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தபொ.மல்லாபுரம் மக்கள் அரசுக்கு கோரிக்கை
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தபொ.மல்லாபுரம் மக்கள் அரசுக்கு கோரிக்கை
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தபொ.மல்லாபுரம் மக்கள் அரசுக்கு கோரிக்கை
ADDED : செப் 28, 2025 02:24 AM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.மல்லாபுரத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதை நம்பி, பொ.மல்லாபுரம் பேரூராட்சி, திப்பிரெட்டிஹள்ளி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 20,000க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். சேலம், தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் தினமும், 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில், மூன்று டாக்டர்கள், 3 செவிலியர் மட்டும் உள்ளனர். இதிலும், ஒரு டாக்டர் அயல் பணியிலும், ஒரு செவிலியர் மருத்துவ விடுப்பிலும் உள்ளனர்.
டாக்டர்கள் காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை மட்டுமே பணியில் உள்ளனர். அதற்கு பின் மறுநாள் காலை, 9:00 மணி வரை, டாக்டர்கள் இருப்பதில்லை. செவிலியர்களே பணியை கவனிக்கின்றனர். வத்தல்மலை அடிவாரத்தில் மருத்துவமனை உள்ளதால், விஷ ஜந்து கடித்து இரவில் மருத்துவமனைக்கு மக்கள் வரும்போது, டாக்டர்கள் இல்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
விபத்து மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கும் மக்கள், இரவில் வர முடியாத அளவிற்கு உள்ளது.
கர்ப்பிணிகள் இரவில் பிரசவத்திற்கு வரும்போது மருத்துவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததாலும், போதிய வசதிகள் இல்லாததாலும், பையர்நத்தம் அல்லது பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால், கடும் அவதிக்கு ஆளாகி வரும் மக்களுக்காக, இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக அரசு மாற்றி, கூடுதல் டாக்டர்கள், செவிலியர்களை நியமித்து, அறுவை சிகிச்சை அறை, கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.