/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கல்குவாரியையொட்டி சாலை அடைத்ததால் மக்கள் மறியல்
/
கல்குவாரியையொட்டி சாலை அடைத்ததால் மக்கள் மறியல்
ADDED : மே 24, 2025 01:59 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, மோளையானுார் - மெணசி சாலையில் கோம்பை காட்டிற்கு செல்லும் வழியில், அரசு டாமின் நிறுவனத்துக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த, ஆறு மாதத்திற்கு முன்பு டாமின் நிறுவனம் அங்கு திறக்கப்பட்டது. அந்நிறுவனத்தில் மூலம் பணி செய்ததை அப்பகுதி விவசாயிகள் கண்டித்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து டாமின் நிறுவனத்துக்கும், அப்பகுதி விவசாயிகளுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கல்குவாரி நிர்வாகம், அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயிகள் சென்று வந்த, மண் சாலையை கற்கள் கொட்டி சாலையை அடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி உள்ளிட்ட விவசாயிகள் வெங்கட சமுத்திரம் - மெணசி செல்லும் சாலையில் மதியம் 12:30 முதல் 1:00 மணி வரை குவாரி முன் முட்களை வெட்டி போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் செந்தில், இன்ஸ்பெக்டர் வான்மதி உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து கல்குவாரி நிறுவனம் தற்காலிகமாக சாலையில் கொட்டிய கல் மண்ணை அகற்றி, விவசாயி
களுக்கு வழி விட்டது.