வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி மக்கள் குடியேறும் போராட்டம்
வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி மக்கள் குடியேறும் போராட்டம்
ADDED : அக் 01, 2026 03:45 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, கீழானுார் மற்றும் கொத்தனாம்பட்டியை சேர்ந்த பட்டி-யலின மற்றும் பழங்குடி மக்களுக்கு கீழானுாரில் உள்ள கல்லாங்-குத்து புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து, வீட்டு-மனைப் பட்டா வழங்கக்கோரி கடந்த ஓராண்டுக்கு முன், போராட்டங்கள் நடத்தப்பட்டது.
ஆனால், வீட்டுமனைப்-பட்டா வழங்கப்படவில்லை. இதையடுத்து நேற்று, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், கீழானுாரில் குடி-யேறும் போராட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் முத்து தலைமை வகித்தார். இதில், மா.கம்யூ., கட்சி மாநிலக்குழுழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் சிசுபாலன், ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரூர் டி.எஸ்.பி., சதீஸ்-குமார், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 15 நாட்களுக்குள் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, மாலை, 5:15 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்-டது.
