ADDED : அக் 01, 2026 03:44 AM

தர்மபுரி: தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தர்மபுரி அருகேவுள்ள இலக்-கியம்பட்டி பஞ்.,ல் கடந்த, 15 ஆண்டுக்கு முன் சாலையின் இரு-புறமும், 200 மீட்டர் நீளமுள்ள சாக்கடை கால்வாய் அமைக்கப்-பட்டது. இது துார்வாரமல் மண் மூடி கிடந்ததால், மழைக்காலங்-களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகள் மற்றும் குடியி-ருப்பு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், அவ்வப்போது வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி நின்-றதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். சாக்கடை கால்வாய்-களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பதால், கழிவுநீர் வெளி-யேற முடியாத நிலையில் இருந்தது. தற்போது, தர்மபுரி மாவட்-டத்தில் காய்ச்சல் தொற்று பரவி வருவதால், கழிவுநீர் தேங்கு-வதை தடுக்கவும், இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை துார்வார, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்-தனர்.
இது குறித்து, நம் 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்து, 28ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று பஞ்., நிர்வாகம் சார்பில், சாக்கடை கால்வாய்களை துார்வாரும் பணியில் ஒரு பெண் உட்பட, 3 துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில், மூவருக்கும் கையுறை, மாஸ்க் உள்ளிட்டவை பஞ்., நிர்-வாகம் சார்பில் வழங்கவில்லை. வெறும் கைகளால் மண்வெட்டி மூலம் சாக்கடை கழிவுகளை அப்புறபடுத்தினர்.
மாவட்டத்தில் நோய்தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், துாய்மை பணியாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகர-ணங்கள் வழங்காமல், துாய்மை பணி செய்ய வைத்த பஞ்., நிர்-வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
