/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி 3வது முறையாக மக்கள் போராட்டம்
/
டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி 3வது முறையாக மக்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி 3வது முறையாக மக்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி 3வது முறையாக மக்கள் போராட்டம்
ADDED : ஜூன் 03, 2025 01:40 AM
அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையத்தில் இருந்து இடமாற்றம் செய்து, என்.புதுார் அடுத்த கூசப்பன்கொட்டாய் பஸ் ஸ்டாப் பகுதியில் அமைத்த டாஸ்மாக் கடையை, கடந்த, 15ல் திறக்க முயன்றனர்.
இதற்கு பத்திகவுண்டனுார் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மூடப்பட்டு கடந்த, 28ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று, 3வது முறையாக போலீசார் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடையை அதிகாரிகள் திறக்க முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்திகவுண்டனுார் பகுதி மக்கள் நேற்று நண்பகல், 12:00 முதல், மாலை, 6:00 மணிக்கு மேலாகியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருபுறம் குடிமகன்கள் கடையை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ், அஞ்செட்டி தாசில்தார் கோகுல்நாத் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனால் நேற்றும் கடை திறக்கப்படவில்லை.