/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொம்மிடியில் இருந்து ஏற்காடுக்கு பஸ்கள் இயக்க மக்கள் வேண்டுகோள்
/
பொம்மிடியில் இருந்து ஏற்காடுக்கு பஸ்கள் இயக்க மக்கள் வேண்டுகோள்
பொம்மிடியில் இருந்து ஏற்காடுக்கு பஸ்கள் இயக்க மக்கள் வேண்டுகோள்
பொம்மிடியில் இருந்து ஏற்காடுக்கு பஸ்கள் இயக்க மக்கள் வேண்டுகோள்
ADDED : நவ 02, 2024 01:11 AM
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 2---
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து ஏற்காடுக்கு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி - --சேலம் மாவட்ட எல்லையில் வீராட்சியூர், பூமரத்தூர், கொளாவூர் உள்ளிட்ட, 30 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காகவும், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்கவும், பொருட்கள் வாங்கவும், பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டி, பகுதியை சார்ந்து உள்ளனர்.
இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் பி.துருஞ்சிப்பட்டி, பையர்நத்தம், பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். பொம்மிடியில் இருந்து வீராச்சியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தார் சாலை வசதி இருந்தும், மாணவ, மாணவியர் சென்று வர பஸ் வசதி இல்லை. இதனால், நாள்தோறும் நடந்து சென்று படிக்கும் அவல நிலையில் உள்ளனர்.
இது மட்டுமல்லாமல் பொம்மிடியில் இருந்து ஏற்காடு மலை, 25 கி.மீ., துாரத்தில் தான் உள்ளது. வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பொம்மிடி வழியாகத்தான் கார் , பைக் மூலம் ஏற்காடு செல்கின்றனர்.
குறைந்த அளவு தூரம் கொண்ட இதன் வழியாக ,அரசு பஸ் இயக்க வேண்டும். அவ்வாறு பஸ் வசதி ஏற்படுத்தினால் மலைகிராம மக்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பயன் பெறுவர். ஆகவே பொம்மிடியில் இருந்து ஏற்காடுக்கு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.