ADDED : ஜூலை 06, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானுார் ஊராட்சியில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மோளையானுார் அரசு பள்ளி முதல், மெணசி சாலை வரையிலான சாலையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தார்ச்சாலை, 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இச்சாலை முழுவதும், சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவியர் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால் அவ்வழியே சென்று வர முடியாமல், மக்கள் அவதிபட்டு வருகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள, இச்சாலையை சீரமைக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.]