/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி
/
அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி
ADDED : செப் 05, 2025 01:35 AM
அரூர் அரூரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மின்தடையால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரில், கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், கோவிந்தசாமி நகர், நான்கு ரோடு, முருகர் கோவில் தெரு, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது.
பல மணி நேரமாகியும் மின்சாரம் வராததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். முதியோரும், குழந்தைகளும் புழுக்கம் தாங்க முடியாமலும், கொசுக்கடியாலும் துாங்க முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். ஏற்கனவே, அம்பேத்கர் நகர், கச்சேரிமேடு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், முறையாக மின்சாரம் வழங்க, மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.