/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மீனாற்றில் வெள்ளப்பெருக்கு வீடுகளில் முடங்கிய மக்கள்
/
மீனாற்றில் வெள்ளப்பெருக்கு வீடுகளில் முடங்கிய மக்கள்
மீனாற்றில் வெள்ளப்பெருக்கு வீடுகளில் முடங்கிய மக்கள்
மீனாற்றில் வெள்ளப்பெருக்கு வீடுகளில் முடங்கிய மக்கள்
ADDED : அக் 23, 2025 01:19 AM
பாப்பிரெட்டிப்பட்டி, ச பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், போதக்காடு ஊராட்சியில், கரியதாதனுார், மாரியம்மன் கோவிலுார், போதக்காடு முல்லைநகர் ஆகிய, 4 குக்கிராமங்களில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், மாரியம்மன் கோவிலுார், காளியம்மன் கோவில் பகுதியில் மட்டும், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் மீனாறு, இக்கிராமங்களின் வழியாக செல்கிறது. இந்த ஆறு கிராமத்தை, இரண்டாக பிரிக்கிறது. ஆற்றின் மறுகரை ஏற்காடு மலையடிவாரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.பருவ மழையால் ஏற்காட்டில் பெய்யும் மழையால், மீனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாரியம்மன் கோவிலுார், காளியம்மன் கோவில், ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், 'ஏற்காடு பகுதியில் மழை பெய்து வருவதால், மீனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆற்றை கடக்க முடியவில்லை. மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இப்பகுதியினர் கடந்த பல ஆண்டுகளாக மீனாற்றின் குறுக்கே பாலம் கட்ட வலியுறுத்தி அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை' என்றனர்.