/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாய்ந்த மின்கம்பத்திற்கு முட்டு தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
/
சாய்ந்த மின்கம்பத்திற்கு முட்டு தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
சாய்ந்த மின்கம்பத்திற்கு முட்டு தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
சாய்ந்த மின்கம்பத்திற்கு முட்டு தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
ADDED : அக் 23, 2025 01:15 AM
சூளகிரி சூளகிரி அடுத்த கோனதிம்மனப்பள்ளி கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்த தொடர் மழையால், இரு மின்கம்பங்கள் சாய்ந்து, விழும் நிலையில் உள்ளன.
அதில் ஒரு கம்பத்திற்கு, அப்பகுதி மக்கள் மரக்கட்டையால் முட்டு கொடுத்து வைத்துள்ளனர்.
அதேபோல், மின்கம்பத்திலிருந்து செல்லும் உயர்மின் அழுத்த மின் கம்பிகள், வீடுகள் முன் தாழ்வாக செல்கின்றன. அதனால், அப்பகுதி மக்கள் மின்கம்பிகள் மீது எதிர்பாராத விதமாக கையை வைத்து விட்டாலும், மின்சாரம் தாக்காமல் இருக்க, மின்கம்பிகளில் பிளாஸ்டிக் பைப்புகளை அமைத்துள்ளனர்.
மேலும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை அதிகாரிகள் உயரமாக அமைக்க நடவடிக்கை எடுக்காததால், அதற்கும் மரக்கட்டையால் மக்கள் முட்டு கொடுத்து உயரமாக செல்லும் வகையில் செய்துள்ளனர்.
கோனதிம்மனப்பள்ளி கிராமத்திற்கு சரியான சாலை வசதியும் இல்லை. தற்போது மழைக்காலம் என்பதால், குண்டும், குழியுமான பாதையில் மழைநீர் தேங்கி, கிராமத்திற்கு செல்ல மக்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.