/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் வலியுறுத்தல்
/
தர்மபுரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் வலியுறுத்தல்
தர்மபுரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் வலியுறுத்தல்
தர்மபுரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 05, 2025 03:06 AM
அரூர்: அரூரில் இருந்து, மொரப்பூர் வழியாக, தர்மபுரிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போதியளவில் பஸ்கள் இயக்கப்படாததால், இந்த வழித்தடத்தில் வரும் பஸ்களில் எப்போதும் பயணிகள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.
மேலும், இந்த வழித்தடத்தில் ஒரு சில நேரங்களில், அரைமணி நேரத்திற்கு மேல், பஸ்சுக்காக மக்கள் காத்திருக்கும் நிலையுள்ளது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளை சேர்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாவட்ட தலைநகரான தர்மபுரியில் உள்ள கலெக்டர், எஸ்.பி., அலுவலகம் ஆகியவற்றிற்கு செல்வதுடன், நோயாளிகள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.
தர்மபுரியில் உள்ள அரசு கலைக் கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கு, அரூர் பகுதியில் இருந்து மாணவ, மாணவியர் அதிகளவில் செல்கின்றனர். எனவே, அரூரில் இருந்து, தர்மபுரிக்கு கூடுதலாக பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.