/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
347 விநாயகர் சிலைகள் வைக்க அரூர் சப்-டிவிஷனில் அனுமதி
/
347 விநாயகர் சிலைகள் வைக்க அரூர் சப்-டிவிஷனில் அனுமதி
347 விநாயகர் சிலைகள் வைக்க அரூர் சப்-டிவிஷனில் அனுமதி
347 விநாயகர் சிலைகள் வைக்க அரூர் சப்-டிவிஷனில் அனுமதி
ADDED : ஆக 26, 2025 01:55 AM
அரூர், : நாளை, (ஆக.27) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கோவில், பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது. 3 நாட்களுக்குப்பின், சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனில், விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் கூறியதாவது: அரூர் சப்-டிவிஷனில், 9 போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்தாண்டு, 347 சிலைகள் வைக்கப்பட்டது. நடப்பாண்டும் அதே எண்ணிக்யைில், 347 சிலைகள் வைக்க விழா குழுவினர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 10 அடிக்கு மேல் சிலை வைக்கக்கூடாது. அரூர் கோட்டத்தில், அனுமன் தீர்த்தம், வரட்டாறு தடுப்பணை, வாணியாறு அணை, டி.அம்மாப்பேட்டை மற்றும் தென்பெண்ணையாறு ஆகிய, 5 இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிலை அமைப்பு குழுவினர் பிற மதத்தினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பான முறையில், ஊர்வலங்கள், வெடிகள் வெடிப்பது போன்றவற்றில் போலீசாரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். சிலை வைக்க சம்மந்தப்பட்ட பஞ்., அல்லது டவுன் பஞ்.,ல் அனுமதி, மின்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் அனுமதி கடிதத்துடன், ஆர்.டி.ஓ., அனுமதி பெற வேண்டும். விதிகளை மீறினால், போலீசாரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வரும் காலங்களில் சிலை வைக்க அனுமதிக்கப் பட மாட்டாது. இவ்வாறு, அவர் கூறினார்.