ADDED : நவ 25, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து, அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது: அரூர் அடுத்த பேதாதம்பட்டி கிராமத்தில், ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை வழங்குவதற்காக, 8 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், அவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தில், இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், பேதாதம்பட்டி கிராமத்தில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். இட பற்றாக்குறையை போக்க, வீடு இல்லாதவர்களுக்கு அரசு உரிய ஆய்வு செய்து, விட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

