/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு மகளிர் பள்ளி முன் போலீஸ் பாதுகாப்புக்கு மனு
/
அரசு மகளிர் பள்ளி முன் போலீஸ் பாதுகாப்புக்கு மனு
ADDED : நவ 19, 2024 01:42 AM
அரசு மகளிர் பள்ளி முன் போலீஸ் பாதுகாப்புக்கு மனு
தர்மபுரி, நவ. 19-
தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியரின் பெற்றோர், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரியிலுள்ள, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 4,500க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். கிராம பகுதிகளில் இருந்து பஸ்களில் வரும் மாணவியர், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, பள்ளி வரை அரை கி.மீ., துாரம் நடந்து வருகின்றனர். மாணவியர் வரும் வழியில், சில இளைஞர்கள் மாணவியரை கேலி, கிண்டல் செய்தும், அச்சுறுத்தியும் வருகின்றனர். எனவே, இப்பள்ளி முன் மற்றும் மாணவியர் வரும் வழியில், பாதுகாப்புக்கு போலீசாரை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.