/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொதுநிதியில் தனியார் நிலத்தில் சுற்றுச்சுவர் பணியை நிறுத்த கிராம மக்கள் புகார் மனு

ADDED : மே 21, 2024 11:02 AM
தர்மபுரி: தர்மபுரி ஒன்றியம், வெள்ளோலை கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி ஒன்றியத்திலுள்ள வெள்ளோலை பஞ்.,க்கு உட்பட்ட சோலைக்கொட்டாயில் அரசு பொது நிதியில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்குள்ள சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. ஆனால், சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்காமல் அருகிலுள்ள தனியார் விவசாய நிலத்துக்கு சுற்றுச்சுவர் கட்டி வருகின்றனர்.
கடந்த ஜனவரியில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் இப்பணியை நிறுத்தவில்லை. இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தனியார் நிலத்தில் அமைத்த சுவரை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தர்மபுரி பி.டி.ஓ., சத்யாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வெள்ளோலை பஞ்.,க்கு உட்பட்ட மாதன்கொட்டாயில், சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க, 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் புகார் மனு அடிப்படையில் விசாரணை நடத்தினோம். இதில், சுற்றுச்சுவர் தவறான இடத்தில் அமைப்பது தெரிந்தது. இதனால், அப்பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளோம். முழுமையாக விசாரித்த பின், சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.