/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
3 தலைமுறைகளாக வசிக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு மனு
/
3 தலைமுறைகளாக வசிக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு மனு
3 தலைமுறைகளாக வசிக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு மனு
3 தலைமுறைகளாக வசிக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு மனு
ADDED : அக் 28, 2025 01:49 AM
தர்மபுரி, அரசு புறம்போக்கு நிலத்தில், 3 தலைமுறைகளாக வசித்து வரும் இடத்திற்கு, பட்டா வழங்க கோரி, மாட்லாம்பட்டியை சேர்ந்த, 3-0க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, பைசுஹள்ளி பஞ்., மாட்லாம்பட்டி கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த மூன்று தலைமுறைகளாக வசிக்கிறோம். நாங்கள் மின் இணைப்பு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தும் பெற்றுள்ளோம். ஆனால், இதுவரை நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.