/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.,யிடம் மனு

ADDED : ஜூன் 21, 2025 01:36 AM
தர்மபுரி, நல்லம்பள்ளி அருகே, அடியாட்களுடன் வந்து, கிராமத்தில் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்ககோரி, எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் மனு அளித்தனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி பஞ்., கோணங்கிஹள்ளி கிராமத்தில் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் கடந்த, 15 அன்று உள்ளுர் நபர்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அதில் ஒருவருடைய உறவினர் பக்கத்து கிராமத்தில் இருந்து, 15-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து தாக்குதல் நடத்தினர்.
அப்போது, அங்கு வந்த நபர்களின் பைக்குகளை பறிமுதல் செய்து, அதியமான்கோட்டை போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தோம். ஆனால், அங்கு எங்கள் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் எங்களை மிரட்டுகின்றனர்.
எனவே, அடியாட்களுடன் கிராமத்தில் வந்து தாக்குதல் நடத்திய, 15-க்கும் மேற்பட்டவகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத, அதியமான்கோட்டை போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு கூறினர்.