/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர், சாலை வசதி கலெக்டரிடம் மனு
/
குடிநீர், சாலை வசதி கலெக்டரிடம் மனு
ADDED : ஏப் 29, 2025 01:36 AM
தர்மபுரி,:
இண்டூர் பகுதி மக்கள், தர்மபுரி கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, இண்டூர் அடுத்த, நடப்பணஹள்ளியில் கோவிந்தன் வீட்டுக்கொட்டாய் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒகேனக்கல் குடிநீர் வழங்கவில்லை.
அதேபோல், போதிய சாலை வசதியில்லாததால், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் என, அனைவரும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே, மாவட்ட கலெக்டர், எங்கள் பகுதியை நேரில் ஆய்வு செய்து, குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

