ADDED : ஜூன் 10, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கவரமலை காட்டு பகுதியிலிருந்து நேற்று வழி தவறி வந்த காட்டு பன்றி, இராமியம்பட்டியில் வனத்தையொட்டி உள்ள சுரேஷ் என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படையினர், கிணற்றில் இருந்த காட்டு பன்றியை உயிருடன் மீட்டு, வனக்காப்பாளர் முருகனிடம் ஒப்படைத்தனர். அது, கவர மலை வனப்பகுதியில் விடப்பட்டது.