ADDED : ஜூன் 07, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 10 பஞ்.,களில், முதற்கட்டமாக, 3,500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நடந்தது.
வேடகட்டமடுவு பஞ்., கருங்கல்பாடியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை, பி.டி.ஓ., செல்வன் துவக்கி வைத்தார். அதேபோல், செட்ரப்பட்டி, செல்லம்பட்டி, பையர்நாயக்கன்பட்டி ஆகிய, பஞ்.,ல், 4 ஏரிகள் துார்வாரும் பணி நேற்று துவங்கப்பட்டது.
அரூர், அனைத்து மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, ஒடசல்பட்டியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை பிரேமா தலைமை வகித்தார். இதில், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர்.