/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சென்டர் மீடியனில் கட்சி கொடிகளால் செடிகள் சேதம்
/
சென்டர் மீடியனில் கட்சி கொடிகளால் செடிகள் சேதம்
ADDED : செப் 09, 2025 02:34 AM
அரூர், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல், சேலம் அயோத்தியாப்பட்டணம் வரை, 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக வாணியம்பாடி முதல், தர்மபுரி மாவட்டம் அரூர் - ஏ.பள்ளிப்பட்டி வரை, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடக்கிறது. இவ்வழியாக தினமும், ஆயிரக்கணக்கான கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. நான்கு வழிச்சாலை பணி முடிவடைந்த நிலையில், சாலையோரத்தில் மரக்கன்றுகளும், சாலை நடுவே சென்டர் மீடியனில் செடிகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டன.
இந்நிலையில், அரூர் கச்சேரிமேட்டில், அடிக்கடி அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படு கின்றன. அக்கட்சிகளின் சார்பில், சாலை சென்டர் மீடியனில் கட்சி கொடிகள் கட்டப்படுகின்றன. இதனால், அங்குள்ள செடிகள் சேதமடைந்தும், காய்ந்தும் போய்விட்டன.
தற்போது, அரூர் கச்சேரிமேட்டில் இருந்து, டி.எஸ்.பி., அலுவலகம் வரை பெரும்பாலான செடிகள் மாயமாகி விட்டன. எனவே, உரிய முறையில் செடிகளை பராமரிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.