/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆன்லைன் கேம் விளையாடி கடனாளியானவர் மாயம்
/
ஆன்லைன் கேம் விளையாடி கடனாளியானவர் மாயம்
ADDED : ஆக 07, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, மோட்டுபட்டியை சேர்ந்தவர் சதீஷ், 40; இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
கடந்த ஒரு வருடமாக, மொபைலில் ஆன்லைன், 'டிரேடிங் பிட் காயின்ஸ்' என்ற விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் அதிகளவில் கடன் பெற்று விளையாடி, அந்த பணத்தை இழந்துள்ளார். மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த மாதம், 25 ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து, அவரது மனைவி பானுமதி புகாரின் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.