/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பா.ம.க., உழவர் பேரியக்க நிர்வாகிகள் நியமனம்
/
பா.ம.க., உழவர் பேரியக்க நிர்வாகிகள் நியமனம்
ADDED : நவ 02, 2024 01:14 AM
பா.ம.க., உழவர் பேரியக்க
நிர்வாகிகள் நியமனம்
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 2---
தர்மபுரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த, பா.ம.க., தமிழ்நாடு மாநில உழவர் பேரியக்க செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணை தலைவராக எஸ். கொட்டாவூரை சேர்ந்த சின்னசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக மூக்கனூரை சேர்ந்த ஈஸ்வரன், மாவட்ட தலைவராக கம்பைநல்லூரை சேர்ந்த சபரி, மாவட்ட துணை செயலாளராக பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த கார்த்திக் தமிழ்வாணன், மாவட்டத் துணைத் தலைவராக நத்தமேடுவை சேர்ந்த சேட்டு ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.