நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார், கம்பைநல்லுாரில், ஒருங்கிணைந்த மொரப்பூர் ஒன்றியம் மற்றும் கம்பைநல்லுார் நகர, பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மொரப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் நாராயணன் வரவேற்றார். நகர செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாநில உழவர் பேரியக்க செயலாளர் வேலுசாமி, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில் ஆகியோர் பேசினர். இதில், பழைய உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பழைய கிளைகளை புதுப்பித்தல், புதிய கிளைகளை உருவாக்குதல், ஓட்டுச்சாவடி ஏஜன்ட்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.